நகரபிதாவின் வீட்டில் வரையப்பட்ட ஸ்வாஸ்திகா இலட்சணை! - விசாரணைகள் ஆரம்பம்!!
17 கார்த்திகை 2023 வெள்ளி 18:03 | பார்வைகள் : 19551
Saint-Mandrier-sur-Mer (Var மாவட்டம்) நகரின் முதல்வரது வீட்டின் சுவற்றில் ஸ்வாஸ்திகா இலட்சணை சமூகவிரோதிகளால் வரையப்பட்டுள்ளது. யூத மதத்தினரை அவதூறுபடுத்தும் இந்த இலட்சணையை வரைந்தவர்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த இலட்சணைகள் கண்டறியப்பட்டது. ரீபபுளிக்கன் கட்சியைச் சேர்ந்த நகரபிதா Gilles Vincent அவர்களின் வீட்டின் வெளிப்புற சுவற்றில் ஸ்வாஸ்திகா இலட்சணை வரையப்பட்டுள்ளது. “எனது வீட்டில் மட்டும் இது வரையப்பட்டுள்ளதால், நகர பிதாவினையே இலக்கு வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது!” என Gilles Vincent தனது சமூகவலைத்தள பக்கத்தில் எழுதியுள்ளார்.
இந்த இலட்சணை உடனடியாக அழிக்கப்பட்டதோடு, இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan