Paristamil Navigation Paristamil advert login

' புனித பெண்மை" (Féminin Sacré) குறித்த அமைப்பு ஆபத்தானது, அடிமையாக்குகிறது. அவதானம்.

' புனித பெண்மை

18 கார்த்திகை 2023 சனி 08:06 | பார்வைகள் : 2914



'Feminin Sacré' என்னும் அமைப்பு ஒன்று உருவாகி "பெண்களின் வளர்ச்சி", "பெண்ணின் சிறப்பு", "அறியாத பெண்ணை பெண்ணே அறிந்து கொள்" என இணையத்தளத்தில் சிறப்பாக Tik tok செயலியின் வழியாக விளம்பரங்கள், பதிவுகள் இட்டு பெண்களை அணுகி, அவர்களை எதிர்காலத்தில் தமக்கு அடிமையாக்கி வருகிறது.

கூட்டு பிரார்த்தனை, இயற்கை வழிபாடு, யோகா போன்ற பயிற்சிகள், நடன அமைப்புக்கள், மூலிகை மருத்துவம் போன்ற புதிய வகையான மருத்துவங்கள் என பல செயல்களில் ஈடுபட வைத்து ஒவ்வொன்றுக்கும் பணமும் வசூலித்து வருகிறது.

பல வேளைகளில் பெண்கள் கூட்டாகவும், தனியாகவும் நிர்வாணமாக பிரார்த்தனைகளில், பயிற்சிகளில் ஈடுபட வைத்தது நிழல் படங்களும் எடுக்கப்படுகிறது எனவும் அங்கு சென்ற பெண்கள் தெரிவிக்கின்றனர். 

அவர்கள் அளிக்கும் சடங்குகளில் ஒன்று "கருப்பை ஆசீர்வாதம்" ( la bénédiction de l’utérus) பிரசவத்திற்குப் பிறகு அல்லது மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களை குணப்படுத்த, 'யோனி நீராவி குளியல்'  சிகிச்சை பரிந்துரைக்கப்படுகினறது. இந்த நடைமுறைகள் மிகவும் ஆபத்தானவை என (gynécologue) பெண்களுக்கான மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான நிலையங்கள் மெல்ல மெல்ல பிரான்சின் முக்கிய நகரங்களில் அதிகரித்து வருன்கிறது. பல பயிற்சி நூல்களும் வெளியாகிறது. 

இந்த அமைப்பில் இணைந்த பல பெண்கள் குறிப்பிடும் போது "முதலில் செயல்பாடுகள், பயணங்கள், சந்திப்புகள், பயிற்சிகள் நன்றாகவும், இதமாகவும் இருக்கிறது. ஆனால் போகப் போக தன்நிலை மறந்து ஒரு போதைக்கு அடிமையாவது போல் தாங்கள் 'Feminin Sacré'' க்கு அடிமையாக்கி போவதை உணர்வதாக தெரிவித்துள்ளனர். 

இது ஒரு ஆபத்தான அடிமையாக்கும் செயல்பாடு என்வே பெண்கள் அவதானமாக இருக்கும்படி France 2 தொலைக்காட்சியின் குழு ஒன்று நடத்திய நேரடி ஆய்வின் பின்னர், தமது விவரணப் பதிவின் போது எச்சரித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்