ஈரான் தீவிரவாதக் குழுக்களுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா
18 கார்த்திகை 2023 சனி 08:43 | பார்வைகள் : 2903
ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா புதிய பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும் அவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் விடுத்த அறிக்கையில்,
சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சண்டையிடும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் வீரர்களுக்கு ஆபத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வரும் கே.எஸ்.எஸ் என்ற ஈரான் ஆதரவு இயக்கம் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த இயக்கத்துடன் தொடர்புடைய ஆறு பேரை சர்வதேச தீவிரவாதிகளாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.