ரொனால்டோவின் புதிய உலக சாதனை...
18 கார்த்திகை 2023 சனி 10:38 | பார்வைகள் : 8818
யூரோ கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்த்துக்கல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஐரோப்பிய அணிகள் பங்குபெறும் UEFA யூரோ கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
நேற்று Rheinpark Stadion மைதானத்தில் நடந்த போட்டியில் போர்த்துக்கல் (Portugal) மற்றும் லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் தன்னிடம் வந்த பந்தை, ரொனால்டோ (Ronaldo) புயல்வேகத்தில் கடத்தி சென்று மிரட்டலாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 57வது நிமிடத்தில் போர்த்துக்கலின் கேன்செலோ (Cancelo), எதிரணி கோல் கீப்பரை தடுமாற வைத்து லாவகமாக பந்தை கடத்தி கோலாக்கினார். அதுவே அணியின் வெற்றி கோலாகவும் மாறியது.
லிச்சென்ஸ்டீன் அணியால் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், போர்த்துக்கல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இது போர்த்துக்கலின் தொடர்ச்சியான 9வது வெற்றி ஆகும். அதேபோல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள லிச்சென்ஸ்டீன் அணிக்கு இது 9வது தோல்வி ஆகும்.
மேலும், ரொனால்டோ அதிக சர்வதேச கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தக்கவைத்துள்ளார்.
அவர் 204 போட்டிகளில் 128 கோல்கள் அடித்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் 109 கோல்களுடன் ஈரானின் முன்னாள் வீரர் அலி தேய்யும் (Ali Daei), லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 106 கோல்களுடனும், சுனில் சேத்ரி (Sunil Chhetri) 93 கோல்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan