Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : கொட்டும் மழையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!!

பரிஸ் : கொட்டும் மழையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!!

18 கார்த்திகை 2023 சனி 16:56 | பார்வைகள் : 8271


பரிசில் தற்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது. கொட்டும் மழையையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டக்காரர்கள் குடைகளை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

பிற்பகல் 3 மணி அளவில் Place de la République பகுதியில் குவிந்த ஆர்ப்பாட்டக்கார்கள் பலர், “காஸாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்தை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும்!” என கோஷமிட்டுக்கொண்டு தங்களது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் காஸா பகுதியில் இதுவரை 12,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், “மக்கள் மீது தாக்குதல் நடத்துவரை உடனடியாக இஸ்ரேல் நிறுத்தவேண்டும்!” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்