Paristamil Navigation Paristamil advert login

உதைபந்தாட்ட பயிற்சிவிப்பாளருக்கு சிறைத்தண்டனை!!

உதைபந்தாட்ட பயிற்சிவிப்பாளருக்கு சிறைத்தண்டனை!!

19 கார்த்திகை 2023 ஞாயிறு 12:49 | பார்வைகள் : 10840


இளம் உதைபந்தாட்ட வீரர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பயிற்சிவிப்பாளர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த பயிற்சிவிப்பாளருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ல்ளது. Val-de-Marne மாவட்டத்தில் வசிக்கும் குறித்த பயிற்சிவிப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இந்த பாலியல் பலாத்காரத்தை மேற்கொண்டுள்ளார். தன்னிடம் பயிற்சிக்கு வரும் 15 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள் இருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார். 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் Gobelins, Lusitanos, US Ivry போன்ற பல்வேறு கழகங்களுக்கும் பயிற்சிவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்