பரிஸ் : ஆயுதத்துடன் சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் ஒருவர் கைது!!
19 கார்த்திகை 2023 ஞாயிறு 13:17 | பார்வைகள் : 11518
சுடுவதற்கு தயாரான நிலையில் சன்னங்கள் நிரப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Olivier S. எனும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும், வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் Yamaha TMax ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த நிலையில் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டுள்ளார். அதன்போது அவர் துப்பாக்கி ஒன்றை எடுத்துச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.
அதேவேளை, அவரது கைகளில் Richard Mille நிறுத்தனத்தின் 20,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்றும் இருந்துள்ளது. குறித்த நபர் முன்னதாக 2019 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த குற்றத்துக்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் 9 மி.மீ துப்பாக்கி ஒன்றை எடுத்துச் சென்றிருந்தார் எனவும், அதன் போதே கைது செய்யப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan