Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படக் காரணம் தெரியுமா..?

பெண்களுக்கு  இரும்புச் சத்து குறைபாடு ஏற்படக் காரணம் தெரியுமா..?

19 கார்த்திகை 2023 ஞாயிறு 14:25 | பார்வைகள் : 2266


சமீபகாலமாக நகரத்தில் வசிக்கும் பெண்களிடையே இரும்புச் சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நகரத்தில் வசிக்கும் பெண்கள் கடைபிடிக்கும் நவீன வாழ்க்கை முறையும், மன அழுத்தம் மற்றும் நோய் எதிர்ப்புச் சத்து குறைபாடு ஆகியவை இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

குறிப்பாக மகப்பேறு கோலத்திற்கு பின் உடல் நிலையை சீராக வைத்து கொள்ள பெண்கள் இரும்புச்சத்தை அதிகரிக்கும் வகையிலான உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் மகப்பேறு காலத்திற்கு பின் குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற பல்வேறு காரணிகளால் அவர்களுக்கு இயற்கையாகவே உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும்.

இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் குழந்தைக்கும் தாய்க்கும் தீவிரமான உடல் உபாதைகள் ஏற்படலாம். உதாரணத்திற்கு உடல் சோர்வு பலவீனமாக உணர்தல் ஆகியவை ஏற்படலாம். இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு வல்லுனர்கள் தொடர்ந்து இரும்புச் சத்தை அதிகரிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். கண்டிப்பாக பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்தை கடக்கும் வரை இரும்பு சத்து குறைபாடுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தங்களது உணவிலும் இரும்பு சத்தை அதிகரிக்கும் வகையிலான உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தைகளின் நலனுக்காக ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் நிறைந்த உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு வைட்டமின் ஏ ஊட்டச்சத்தானது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், ஆரோக்கியமான பார்வைத் திறனுக்கும் இன்றியமையாதது ஆகும். பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து தான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றும்.

தாய்ப்பாலில் இருந்து திட உணவு பொருட்களை உட்கொள்ளும் காலகட்டத்திற்கு மாறும் போது அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்துவது அவசியமானதாகும்.

இதை சரி செய்ய நகரத்தில் வசிக்கும் பெண்கள் தங்களது வாழ்க்கை முறையிலும் உணவு பழக்க வழக்கத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினசரி சீரான உடற்பயிற்சி, இரும்பு சத்து நிறைந்த உணவு கட்டுப்பாடு, உடல் எடை கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதின் மூலம் இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்து உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க முடியும். மேலும் புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்ப்பதும் கட்டாயமானதாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்