2023 முடிவதற்குள் ஆரம்பமாகும் அழிவுகள் - ஜோதிடக் கலைஞர் எச்சரிக்கை
20 கார்த்திகை 2023 திங்கள் 08:49 | பார்வைகள் : 2499
2023ஆம் ஆண்டு முடிவதற்குள், உலகின் பல பகுதிகள் பெருவெள்ளம் மற்றும் நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட இருப்பதாக ஜோதிடக் கலைஞர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஏதோஸ் (Athos Salomé).
2023ஆம் ஆண்டின் இறுதி துவங்கி, இந்தியா முதல் அமெரிக்கா வரை என்னென்ன ஆபத்துக்கள் ஏற்பட உள்ளன என்பதை விலாவாரியாக விளக்கியுள்ளார் ஏதோஸ்.
பெருமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், இந்தியாவின் கங்கை நதி, வியட்நாமின் Mekong நதி மற்றும் பிரேசிலில் பெருவெள்ளம் ஏற்படும் என்கிறார் ஏதோஸ்.
இந்தோனேசிய தீவான ஜாவா, அமெரிக்காவின் வடகலிபோர்னியா முதல் கனடாவின் தென் பிரிட்டிஷ் கொலம்பியா வரையிலான பகுதிகள் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் ஏதோஸ்.
பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உட்பட தென்கிழக்கு ஆசியாவில் சூறாவளிகள் மற்றும் புயல்கள், மெக்சிகோ வளைகுடா மற்றும் ப்ளோரிடாவில் பயங்கர புயல்கள் தாக்கும் என கணித்துள்ளார் அவர்.
மேலும், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஜப்பானின் டோக்கியோ ஆகிய நகரங்கள் கடலால் விழுங்கப்படும் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும் எச்சரித்துள்ளார் ஏதோஸ்.
2023இன் இறுதி துவங்கி உலக நாடுகள் பலவற்றுக்கு ஆபத்து உள்ளது என்று கூறி எச்சரிக்கும் ஏதோஸ், ஆனால், தான் மக்களை அச்சுறுத்துவதற்காக இதைக் கூறவில்லை என்கிறார்.
தனது கணிப்புக்கள் நிறைவேறாமற்போகாதா என தானே ஆசைப்படுவதாக தெரிவித்துள்ள ஏதோஸ், தான் கூறியுள்ளதைக் கேட்டு, முன்கூட்டியே கட்டிடங்களின் உள்கட்டமைப்புகளை சரி செய்வது, கொள்கைகளை மற்றுவது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், நாம் ஒன்றிணைந்து இந்த ஆபத்துக்களை தவிர்க்கலாம் என்றும், அதற்காகவே தான் இந்த கணிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.