Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணியின் தோல்வி !தமிழக வீரர் அஸ்வின் வேதனை

இந்திய அணியின் தோல்வி !தமிழக வீரர் அஸ்வின் வேதனை

20 கார்த்திகை 2023 திங்கள் 09:06 | பார்வைகள் : 4502


உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றிருந்தார். 

ஆனால் அவருக்கு களத்தில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய அணி உலகக்கோப்பையை இழந்ததால் வருத்தமடைந்த அஸ்வின், தனது எக்ஸ் பக்கத்தில் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

அவரது பதிவில், 'வலிமையான இதயம் நேற்று 19.11.2023 இரவு நொறுங்கிப் போனது. 

இந்த தொடரில் அணியில் இருந்த ஒவ்வொருவருக்கும் நினைவில் கொள்ள வேண்டிய தருணங்கள் உள்ளன. 

விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை குறிப்பிட வேண்டும்.

எனினும் என்னால் உதவ முடியவில்லை. ஆனாலும் நவீன கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஜாம்பவான்களை பாராட்டலாம். 

நேற்று அவர்கள் களத்தில் செய்தது நம்ப முடியாதது. அவர்களின் 6வது உலகக்கோப்பை வெற்றிக்கு வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்