ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றாமல் தூங்கும் காங்கிரஸ்: மத்திய அமைச்சர் தாக்கு
20 கார்த்திகை 2023 திங்கள் 09:07 | பார்வைகள் : 2558
ராஜஸ்தானில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றாமல் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தூங்கி கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் நவ.,25ல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் காங்கிரஸ் - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் காங்கரஸ் அலை வீசுவதாக அம்மாநிலத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: காங்கிரஸ் அலை வீசுவதாக அவர்கள் (காங்.,) இன்றைக்கு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை.
ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றாமல் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரசார் தூங்கி கொண்டிருக்கின்றனர். பொய்களை சொல்லி அலையை உருவாக்கலாம் என காங்கிரஸ் நினைக்கிறது. அவர்களை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.