பெரும் படையணி களமிறக்கம் - முடக்கப்பட்ட போதைபொருள் முகவர்கள்!!

20 கார்த்திகை 2023 திங்கள் 09:57 | பார்வைகள் : 6667
அதிரடிப்படையினரான CRS, RAID,BRI மற்றும் பெருமளவான காவற்துறையினர் இணைந்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்னனர்.
நீம் (Nîmes) நகரில் இந்தப் பாரிய நடவடிக்கை நடாத்தப்பட்டுள்ளது.
நீம் பெருநகரிலுள்ள இலுள்ள Gard நகரத்தின் Pissevin குடியிருப்புப் பகுதியில் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் பெருமளாவான போதைப்பொருட்கைளக் கைப்பற்றியதுடன் 20 பேரினைக் கைது செய்துள்ளனர்.
250 இற்கும் மேற்பட்ட படையினரும் 75 விசாரணைப்பிரிவினரும் நடாத்திய இந்த நடவடிக்கையில் 1.2 கிலோகிராம் கொக்கெய்ன், 500 எக்ஸ்டெசி மாத்திரைகள், 7 கிலோகிராம் கஞ்சா, பல்லாயிரக்கணக்கான பணம் மற்றும் பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இப்படியான நடவடிக்கைகள் பல சிலவாரங்களிற்கு முதல் 93 இன் பிரதன நகரங்களில் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.