Paristamil Navigation Paristamil advert login

வாட்ஸ்அப்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா...?

வாட்ஸ்அப்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா...?

21 கார்த்திகை 2023 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 2028


வாட்ஸ் அப் தற்போது Security மற்றும் Privacy அம்சங்களை தற்போது மேம்படுத்தி வருகிறது.

பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய அம்சங்கள் குறித்து பலருக்கு தெரியவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் Privacy CheckUp என்பதை அறிமுகப்படுத்தியது.

இதனைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களது Privacy Settings-ஐ உடனடியாக Review செய்து, பின்னர் தங்களுக்கு ஏற்றவாறு Manage செய்து கொள்ளலாம். 

வாட்ஸ்அப் Privacy Check Up அம்சம் மூலமாக, பயனர்கள் அவர்களது அனைத்து பிரைவசி Settings Options-களையும் தெரிந்து கொள்ளலாம்.

அதன் பின் அதனை Enable செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்ற முடிவை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் Privacy settings-யில் உள்ள ''Start Checkup'' என்பதை click செய்ய வேண்டும். 

இதன்மூலம், உங்களை யார் தொடர்பு கொள்ள வேண்டும், Group-களில் உங்களை யாரெல்லாம் இணைக்கலாம் மற்றும் பிளாக் செய்த Contacts-களை Manage செய்வது போன்ற பல்வேறு விதமான Screen-களுக்கு இப்போது வாட்ஸ்அப் உங்களை அழைத்துச் செல்லும். 

மேலும், உங்களது Profile புகைப்படம், Last Seen மற்றும் Online Status போன்ற தனி நபர் விபரங்களையும் நீங்கள் Edit செய்து கொள்ளலாம்.    

தெரியாத நபர்களின் அழைப்புகளை எவ்வாறு Silent Modeயில் வைப்பது, Screen Lockஐ Enable செய்வது, 2FA மற்றும் படிப்படியான விளக்கத்தை இங்கு காண்போம்.

1. தெரியாத நபர்களின் போன் அழைப்புகளை Silent செய்ய வாட்ஸ்அப்பை திறந்து Settings Optionக்கு செல்ல வேண்டும். பின்னர் Account > Privacy என்பதை Click செய்ய வேண்டும்.


இப்போது கீழே Scroll செய்து Blocked Contacts என்பதை Click செய்ய வேண்டும். மேல் வலது மூலையில் உள்ள Add என்பதை Click செய்ய வேண்டும்.

உங்களது Contactsயில் இருந்து Unknown என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். 

2. Screen Lockயை Enable செய்வது Settingக்கு சென்று கீழே Scroll செய்து Screen Lock என்பதை Click செய்யவும். Unlock செய்வதற்கு ஃபேஸ் ID/Touch IDஐ உள்ளிடுக.

3. 2FA Enable செய்தல்: உங்களது வாட்ஸ்அப்பை திறந்து Settings Optionக்கு செல்லுங்கள். பின்னர் Accountக்கு சென்று 2 Step Verification என்பதை Click செய்யுங்கள்.

2 Step Verificationஐ Enable செய்யவும். 6 இலக்கங்கள் கொண்ட PINஐ Enter செய்து Next என்பதை Click செய்யவும். இப்போது உங்களது Email IDயை Enter செய்து Next என்பதை கிளிக் செய்யவும்.

தற்போது உங்களது Email முகவரிக்கு ஒரு Verification Code அனுப்பப்படும். அதனை Enter செய்து Next என்பதை Click செய்யவும்.    

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்