ஹீரோ ஆகும் பிக் பாஸ் பிரபலம்...

21 கார்த்திகை 2023 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 7559
பிக் பாஸ் பிரபலம் நடிகர் ஷாரிக் ஹசன் மற்றும் அம்மு அபிராமி நடித்துள்ள புதிய படம் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர்கள் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் மகன் ஷாரிக் ஹசன். இந்த ஜோடியின் மகன் ஷாரிக் ஹசன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிலையில், அவர் தற்போது கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், படம் எப்போது வெளியாகிறது என்ற தகவலை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அறன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘ஜிகிரி தோஸ்த்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பிற்கு ஏற்ப இதன் கதை நண்பர்களை சுற்றியே நகர்கிறது. மூன்று நண்பர்கள் அவுட்டிங் செல்லும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். பிறகு, அந்த பெண்ணை கேங்ஸ்டரிடம் இருந்து காப்பாற்றினார்களா என்பதே படத்தின் கதையாக உருவாக்கி வருகிறார்கள். இதில் அவர்கள் ’டெரரிஸ்ட் டிராக்கர்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இப்படத்தின் சிறப்பம்சம் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1