Paristamil Navigation Paristamil advert login

நெப்போலியன் தொப்பி 2.1 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் !

நெப்போலியன் தொப்பி 2.1 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் !

21 கார்த்திகை 2023 செவ்வாய் 08:56 | பார்வைகள் : 2491


பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் தொப்பி 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு  பாரிஸில் ஏலம் விடப்பட்டுள்ளது.

நெப்போலியன் தொப்பி 1769 முதல் 1821 வரை பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்தார். 

பிரெஞ்சுக் கொடியின் நீலம்-வெள்ளை-சிவப்பு வண்ணங்களைக் கொண்ட கருப்பு தொப்பி வண்னத்தை கொண்டதாகும்.

உலகெங்கிலும் உள்ள கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை நெப்போலியன் தொப்பி ஈர்த்துள்ளது என்று ஏலதாரர் ஜீன்-பியர் கூறினார். 

தொப்பியை வாங்கியவர் யார் என்ற விவரத்தை ஏலதாரர் வெளியிட விரும்பவில்லை.

நெப்போலியன் தொப்பி தொப்பி 655000 – 873000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போகும் என மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நெப்போலியன் 15 ஆண்டுகளில் சுமார் 120 தொப்பிகளை வைத்திருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை இப்போது தொலைந்துவிட்டதாகவும் ஏலதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த தொப்பி நெப்போலியன் போனபார்ட்டின் உருவத்தை பிரதிபலிப்பதாகவும், தொப்பியின் கடைசி உரிமையாளரான தொழிலதிபர் ஜீன்-லூயிஸ் நொய்சிஸ் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்ததாகவும் பியர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்