வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவருக்கு நான்கு மாதங்கள் சிறை!!
21 கார்த்திகை 2023 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 4717
வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை வித்தித்து Seine-et-Marne மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை குறித்த நீதிமன்றத்தில் மூவர் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வணிக வளாகம் மற்றும் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மூவரில் இருவர் 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் எனவும், ஒருவர் 25 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுவர்கள் இருவருக்கும் விசாரணைகள் பிற்போடப்பட்ட நிலையில், 25 வயதுடையவருக்கு உடனடியாக நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள், Meaux நகரில் உள்ள Pierre-de-Coubertin உயர்கல்வி பாடசாலைக்கு கடந்த நவம்பர் 18 ஆம் திகதி வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். பாடசாலை உடனடியாக வெளியேற்றப்பட்டு, கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன.
பின்னர் அவர்கள் Serris நகரில் உள்ள La Vallée எனும் வணிக வளாகத்துக்கும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.