வெளிநாடொன்றில் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த 75 வயதான ஈழத்து பெண் - குவியும் பாராட்டுக்கள்
21 கார்த்திகை 2023 செவ்வாய் 14:18 | பார்வைகள் : 3400
வெளிநாடொன்றில் அபார திறமையினை வெளிக்காட்டி சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என ஈழத்து பெண்ணொருவர் நிரூபித்துள்ளார்.
பிலிப்பின்ஸில் இளையோர் மற்றும் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்ற ஈழத்து பெண் ஒருவர் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த 75 வயதான திருமதி அகிலத்திருநாயகி என்பவரே இந்த சாதனை படைத்துள்ளார்
ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தரான இவர் விளையாட்டுப் போட்டி இரண்டு தங்கம் உட்பட மூன்று பதகங்களை வென்றுள்ளார்.
1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
800 மீற்றர் ஓட்டத்தில் வெங்கலப் பதக்கமும் 5000 மீற்றர் ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளார்.
திருமதி அகிலத்திருநாயகிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.