Paristamil Navigation Paristamil advert login

கடிகாரத்தில் மெற்றோ பயணச்சிட்டை! - இல் து பிரான்சுக்குள் புதிய வசதி!!

கடிகாரத்தில் மெற்றோ பயணச்சிட்டை! - இல் து பிரான்சுக்குள் புதிய வசதி!!

21 கார்த்திகை 2023 செவ்வாய் 16:07 | பார்வைகள் : 6695


உங்களது ’ஸ்மார்ட்’ கைக்கடிகாரங்களை பயன்படுத்தி மெற்றோவில் பயணிக்க முடியும் எனும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுவரை தொலைபேசிகள் மூலம் பயணச்சிட்டைகளை பெற்று, அதனை NFC எனும் வசதியுடன் மெற்றோ கதவுகளைத் திறந்த பரிஸ் மக்கள், விரைவில் உங்களது கைக்கடிகாரத்தினை கதவின் அருகே காண்பிப்பதன் மூலம் அதனை திறக்கச் செய்ய முடியும். முதற்கட்டமாக Samsung நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களில் இந்த வசதி பரிசோதனை செய்யப்பட உள்ளது. உங்களது Samsung தொலைபேசி மூலம் கைக்கடிகரத்தில் உள்ள செயலிக்கு (App) உங்களது பயணச்சிட்டை தகவலை அனுப்பி வைத்தால் போதுமானது. பின்னர் ஒவ்வொரு முறையும் நீங்கள் மெற்றோ நிலையத்தின் கதவின் அருகே உங்களது கைகளை நீட்டினால் போதும், கதவு திறக்கும்.

கைத்தொலைபேசியில் இருந்து பணம் செலுத்தும் அதே தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்படும்.

இதற்கு முதலில் Samsung கைக்கடிகாரங்களில் 4, 5 ம்ற்றும் 6 ஆகிய மொடல்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு முற்பட்ட மொடல்கள் பயன்படுத்த முடியாது.

இந்த வசதி சோதனைக்கு வரும் சரியான காலப்பகுதி தெரிவிக்கப்படவில்லை. இருந்தபோதும் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்பார்க்கலாம் என அறிய முடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்