Paristamil Navigation Paristamil advert login

கார போண்டா

கார போண்டா

21 கார்த்திகை 2023 செவ்வாய் 16:07 | பார்வைகள் : 2428


மாலையில் டீ குடிக்கும் நேரத்தில் இந்த கார போண்டாவை சுட்டுக்கொடுத்தால் குழந்தைகள், பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கார போண்டாவின் தனித்துவம் என்பது அதை கடிக்கும்போது வரும் மொறு மொறு சத்தம்தான். பின் அதன் சுவை ஆஹா.. ஓஹோ என சொல்லிக்கொண்டே சுவைக்கத் தூண்டும்.

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - 1 tsp
பெருங்காயத்தூள் - 1/2 tsp
எண்ணெய் - 200 கிராம்
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி

செய்முறை :

அரிசி மற்றும் உளுந்தை சுத்தம் செய்து 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

ஊறியதும் மீண்டும் ஒரு முறை அலசிவிட்டு மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அந்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொண்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி , பெருங்காயத்தூள், உப்பு என சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

பின் கடாயில் எண்ணெய் வைத்து அது சூடானதும் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.பின் அவை பொன்னிறமாக வரும் வரை வறுத்து கிண்ணத்தில் போட வேண்டும். இதற்கு காரச்சட்னி, தேங்காய்சட்னி பொருத்தமாக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்