ரூ. 751 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி
22 கார்த்திகை 2023 புதன் 09:01 | பார்வைகள் : 2664
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய இரு நிறுவனங்கள் மீதான பணமோசடி வழக்கில் ரூ. 751 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டது தொடர்பாகவும், ஏ.ஜே.எல்.பங்குதாரர்கள் ஒப்புதல் பெறப்படாதது குறித்தும் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையாக கூறப்படும் ஏ.ஜே.எல். எனப்படும் அசோசியேட் ஜெர்னல் லிமிடெட், யங் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மீதான பண மோசடி வழக்கில் ரூ. 751.09 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.