கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு - மனித எச்சங்கள் - துப்பாக்கிச்சன்னம் மீட்பு

22 கார்த்திகை 2023 புதன் 05:30 | பார்வைகள் : 5355
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்றையதினம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த பொலித்தீன் உறைகள் , உடல் எச்சங்களுக்கு மேற்பகுதியில் காணப்பட்ட மண்கள் அகற்றும் பணியானது கடந்த 20ஆம் திகதி உத்தியோக பூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றையதினம் காலை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய அகழ்வுப் பணியின் போது இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் இலக்க தகடு ஒன்றும் அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.
இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த அகழ்வுப்பணியானது, இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதனைதொடர்ந்து மேலும் இரண்டு மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதுடன் தற்போது மொத்தமாக 19 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1