தவறிக்கூட இந்த பாஸ்வேர்டுகளை வைக்காதீர்கள்! நிபுணர்கள் எச்சரிக்கை
 
                    22 கார்த்திகை 2023 புதன் 09:52 | பார்வைகள் : 9188
இன்றைய சூழலில் நாம் வங்கிக்கணக்கு, வேலை சார்ந்த மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் என பலவற்றிற்கும் பாஸ்வேர்டுகளை (Password) பயன்படுத்தி வருகிறோம்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு பாஸ்வேர்டு என நினைவில் வைத்துக் கொள்வது சிரமம் என்பதால் பலரும் ஒரே பாஸ்வேர்டையும், எளிதான பாஸ்வேர்டையுமே பயன்படுத்துகின்றனர்.
பல ஆய்வுகளின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. இது பயனர் சார்ந்த தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
அதாவது ஹேக்கர்கள் எளிதாக பயனர்களின் கணக்குகளை அணுகும் வசதியை கொடுக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்த NordVPN அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 10 பாஸ்வேர்டுகளை குறிப்பிட்டுள்ளது. இதில் ''123456'' என்ற பாஸ்வேர்டு முதலிடம் பிடித்துள்ளது.
இதுபோன்ற பாஸ்வேர்டுகளை ஹேக் செய்ய எடுக்கும் மதிப்பிடப்பட்ட நேரம் மற்றும் இவற்றை தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை இங்கு காணலாம்.
123456: முதலிடத்தில் உள்ளது இந்த பாஸ்வேர்டு தான். இதனை ஹேக் செய்ய ஒரு விநாடிக்கும் குறைவான நேரம் தான் ஆகும் என்றும், சுமார் 3,63,265 பயனர்கள் இதனை தெரிவு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
admin: ஒரு நொடிக்குள் இந்த பாஸ்வேர்டை ஹேக் செய்ய முடியும். இந்த பாஸ்வேர்டை 1,18,270 பயனர்கள் பயன்படுகிறார்கள்.
12345678: சுமார் 63,618 பயனர்கள் எளிதாக கண்டுபிடிக்கும் இந்த பாஸ்வேர்டை தேர்வு செய்கிறார்கள். இதனை ஹேக் செய்ய ஒரு நொடிக்கும் குறைவான நேரம் போதும் என்கிறார்கள் நிபுணர்கள்.
12345: இதனை 56,676 பயனர்கள் பயன்படுத்தும் நிலையில், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Password: இந்த பாஸ்வேர்டையும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஹேக் செய்யலாமாம். இதனை 52,334 பயனர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
Pass@123: பார்ப்பதற்கு சிக்கலாக இந்த பாஸ்வேர்டு தெரிந்தாலும், இதனை 5 நிமிடத்திற்குள் கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதை 49,958 பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்களாம்.
123456789: ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஹேக் செய்யக்கூடிய இந்த பாஸ்வேர்டை 41,403 பயனர்கள் பயன்படுத்துகிறார்கள் என அறிக்கை கூறுகிறது.
Admin@123: சுமார் 22,646 பயனர்கள் இந்த பாஸ்வேர்டை பயன்படுத்துகிறார்கள். இதை ஹேக் செய்ய ஒரு வருடம் தேவைப்படுமாம்.
India@123: 16,788 நபர்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த பாஸ்வேர்டை ஹேக் செய்ய 3 மணிநேரம் போதுமாம்.
admin@123: இந்த பாஸ்வேர்டை 16,573 பயனர்கள் தேர்வு செய்துள்ள நிலையில், இதை ஹேக் செய்ய 34 நிமிடங்கள் தேவைப்படுமாம்.
எனவே, நீங்கள் அடுத்த தடவை புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்யும்போது, உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்ய இவற்றை தவிர்ப்பது நல்லது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan