Paristamil Navigation Paristamil advert login

திருநங்கையாக மாறிய கனேடிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை!

திருநங்கையாக மாறிய கனேடிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை!

22 கார்த்திகை 2023 புதன் 10:04 | பார்வைகள் : 1229


அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியில்லே மெக்கெஹெயுக்கு சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. 

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்தவர் 29 வயதாகும் டேனியில்லே மெக்கெஹெய் (Danielle McGahey). திருநங்கையாக மாறிய இவர் கனேடிய தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் டேனியில்லேவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. 

ஆணுக்குரிய தன்மை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால், அவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என ஐசிசி அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மேலும் விளக்கம் அளித்த ஐசிசி, 'புதிய விதிமுறையின்படி சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையாகவும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விதி சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். உள்ளூர் போட்டிகளுக்கு அந்நாடுகளின் பாலின வரையறை செயல்பாட்டில் இருக்கும்' என கூறியுள்ளது.


ஐசிசியின் இந்த அறிவிப்பினால் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியில்லே மெக்கெஹெய், இனி சர்வதேச மகளிர் பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்