ODI, T-20 போட்டிகளில் புதிய விதி - ICC அதிரடி முடிவு
22 கார்த்திகை 2023 புதன் 10:14 | பார்வைகள் : 2450
ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் Stop Clock என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.
ஆடவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர் அடுத்த ஓவரை வீச 60 வினாடிகளுக்கு மேல் எடுத்துக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது.
இந்த விதி முதலில் சோதனையாகப் பயன்படுத்தப்படும். ஐசிசி வாரியாக கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் சோதனை அடிப்படையில் இந்த 'stop clock' விதிமுறை பயன்படுத்தப்படும் என தலைமை நிர்வாகிகள் குழு ஒப்புக்கொண்டதாக ஐசிசி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த கடிகாரம் ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படும்.
அறிக்கையின்படி முந்தைய ஓவரை முடித்து 60 வினாடிக்குள் அடுத்த ஓவரை வீச தயாராக இல்லை என்றால், இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக அவ்வாறு செய்யும்போது, 5 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்படும்.