Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை துண்டித்த தென்னாப்பிரிக்கா

இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை துண்டித்த தென்னாப்பிரிக்கா

22 கார்த்திகை 2023 புதன் 10:22 | பார்வைகள் : 3257


காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் மனிதபிமானம் இல்லாத தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றது

இந்நிலையில் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை துண்டிக்க தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டோரியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை மூடுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மேலும், ஹமாஸுடனான போரில் இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு உடன்படும் வரை இஸ்ரேலுடனான அனைத்து தூதரக உறவுகளையும் நிறுத்தி வைத்து தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அடையாளத் தீர்மானம் 248-91 நிறைவேற்றப்பட்டது. இதை அமல்படுத்துவது குறித்து அதிபர் சிரில் ரமபோசா தலைமையிலான அரசு முடிவு செய்யும்.

வாக்கெடுப்புக்கு முன்னதாக திங்களன்று பிரிட்டோரியாவில் இருந்து டெல் அவிவ் நகருக்கான தனது தூதரை இஸ்ரேல் திரும்பப் பெற்றது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக ரமபோசா மற்றும் மூத்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இஸ்ரேலின் தலைமையை விமர்சித்துள்ளனர்.

தென்னாபிரிக்காவும் போர்க்குற்றங்களை விசாரிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது. 

தென்னாப்பிரிக்கா பல தசாப்தங்களாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்