Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-France : தேவாலயத்துக்குள் நுழைந்த மகிழுந்து - ஒருவர் பலி, ஒருவர் காயம்!!

Hauts-de-France : தேவாலயத்துக்குள் நுழைந்த மகிழுந்து - ஒருவர் பலி, ஒருவர் காயம்!!

22 கார்த்திகை 2023 புதன் 18:48 | பார்வைகள் : 5477


மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தேவாலயத்துக்குள் சென்று விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை Houdain (Hauts-de-France) நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் மூவருடன் வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. மகிழுந்து நேரே அருகில் உள்ள Saint-Jean-Baptiste தேவாலயத்தின் மதிற்சுவற்றை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது.

இச்சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்த 27 வயதுடைய பெண் படுகாயமடைந்தார். அவரே தொலைபேசியில் தீயணைப்பு படையினரை அழைத்துவிட்டு மயங்கியதாகவும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், மயக்கமுற்ற அப்பெண்ணை மீட்டதாகவும் அறிய முடிகிறது.

அதேவேளை, மகிழுந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வயது குறிப்பிடப்படாத மற்றொரு நபர்பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழுந்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்