Paristamil Navigation Paristamil advert login

”ligne 19” - புதிய மெற்றோ சேவை!

”ligne 19” - புதிய மெற்றோ சேவை!

22 கார்த்திகை 2023 புதன் 19:14 | பார்வைகள் : 15032


Val d'Oise மாவட்டத்தை மையமாக கொண்டு புதிதாக மெற்றோ வழி ஒன்று உருவாக்கப்படும் என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse அறிவித்துள்ளார்.

19 ஆம் இலக்க மெற்றோ சேவையே உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார். Roissy Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து பிரபல வணிக நகரமான La Défense வரை இந்த மெற்றோ பயணிக்கும் எனவும், இதில் ஒன்பதில் இருந்து பதினொரு நிலையங்கள் வரை உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த புதிய மெற்றோ சேவையினை உருவாக்க 5 இல் இருந்து 7 பில்லியன் யூரோக்கள் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2040 ஆம் ஆண்டை இலக்கு வைத்து அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மெற்றோவின் தூரம் 25 டொடக்கம் 30 கி/மீ வரை இருக்கும் எனவும், இச்சேவையினால் 650,000 மக்கள் பயனடைவார்கள் எனவும் Valérie Pécresse தெரிவித்தார். இந்த அறிவிப்பின் போது Val-d'Oise மாவட்ட முதல்வர் Marie-Christine Cavecchi உடன் இருந்தார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்