Paristamil Navigation Paristamil advert login

சீன பாடசாலைகளில் திடீரென பரவும் மர்ம காய்ச்சல்

 சீன பாடசாலைகளில் திடீரென பரவும் மர்ம காய்ச்சல்

23 கார்த்திகை 2023 வியாழன் 07:28 | பார்வைகள் : 1994


 சீனாவில் மர்மமான நிமோனியா காய்ச்சல் பாடசாலைகளில் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங் மற்றும் லியோனிங் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் நெருக்கடி உருவாகியுள்ளது. 

பாடசாலைகளை மூடுவதே காய்ச்சல் பரவுவதை தடுக்க உரிய வழி என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் நுரையீரல் அழற்சி மற்றும் அதிக காய்ச்சல் உள்ளிட்ட அசாதாரண அறிகுறிகளுடன் உள்ளனர். 

ஆனால் இருமல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லை என்றே கூறுகின்றனர்.

இதனிடையே, உலக அளவில் நோய் பரவல் உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் ProMed என்ற நிறுவனம், குறிப்பாக குழந்தைகளை பாதிக்கும், உறுதி செய்யப்படாத நிமோனியா தொற்றுநோய் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

2019 டிசம்பர் இறுதியில் கொரோனா தொற்று குறித்து இந்த ProMed நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தமை நினைவுக்கூறத்தக்கது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்