Paristamil Navigation Paristamil advert login

மின்சாரத்தில் இயங்கும் முதல் பறக்கும் படகு

மின்சாரத்தில் இயங்கும் முதல் பறக்கும் படகு

23 கார்த்திகை 2023 வியாழன் 07:39 | பார்வைகள் : 2029


மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் பயணிகள் படகு ஸ்வீடன் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முழுவதுமாக மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் பயணிகள் படகு ஸ்வீடன் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம் அறிமுகம் செய்து வைத்துள்ள இந்த பறக்கும் படகு 16 வினாடிகளில் அதன் முழுவேகத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதில் 30 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும் என அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஸ்டாக்ஹோமின் இந்த பறக்கும் படகு விரைவில் வணிக உற்பத்திக்குள் அடியெடுத்து வைக்க இருப்பதாக அதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளனர்.

இந்த பறக்கும் படகின் இரண்டாவது மாடல் 2024 ஆம் ஆண்டு நீர்வழி சேவைகளில் நுழையும் எனவும், அப்போது பறக்கும் படகின் நீர்வழி சேவைகள் நகர மையத்திலிருந்து புறநகர் பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

டீசலில் இயங்கும் இந்த படகுகளை விட பேட்டரியில் இயங்கும் இந்த பறக்கும் படகுகள் விரைந்து செல்ல உதவும் எனவும், இதனால் அதன் பயண நேரம் மிக குறையும் எனவும் அதன் வடிவமைப்பாளர் அறிவித்துள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்