Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் மருத்துவமனைகளில் கோமாளிகள் குழந்தைகள் கும்மாளம்

பிரான்ஸ் மருத்துவமனைகளில் கோமாளிகள் குழந்தைகள் கும்மாளம்

23 கார்த்திகை 2023 வியாழன் 10:03 | பார்வைகள் : 7753


மருத்துவமனைகளில் நாட்கணக்கில் மருத்துவர்களையும், தாதியர்களையும் பார்த்துக் கொண்டு, நோயோடும், மருந்துகளுடனும் வாழும் குழந்தைகளை, சிறுவர்களை சில நிமிடங்கள் குதூகலிக்கவைக்க l'Assistance publique - Hôpitaux de Paris (AP-HP) வருடம் தோறும் இந்த கோமாளிகள் வருகையை நடத்துகிறது.

கோமாளிகள் போல் வேடமிட்டு, கோமாளித்தனமாக செயல்களால் சிரிக்க முடியாத வலிகளோடு இருப்பவர்களையும் சிரிக்க வைக்கும் 136 கலைஞர்கள் குறித்த பணியை கடந்த சில காலமாக செய்துவருகின்றனர். 

பிரான்சில் ஆண்டொன்றுக்கு 90,000 குழந்தைகள், சிறுவர்கள் மருத்துவமனைகளில் நீண்ட நாட்களும், அதேபோல் பல தடவைகளும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக தங்குகின்றனர். அவ்வாறன குழந்தை நோயாளர்களை பார்ப்பதற்கு அவர்களுடன் பேசுவதற்கு பல வேளைகளில் பெற்றோரை தவிர வேறுயாரும் செல்வதில்லை. இதனால் தனிமையை உணரும் சிறுவர்களை மகிழ்ச்சிப் படுத்தவே l'Assistance publique - Hôpitaux de Paris (AP-HP). கோமாளிகளின் கலை வெளிப்பாட்டை மருத்துவமனைகளின் அறைகளில் அரங்கேற்றுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்