Paristamil Navigation Paristamil advert login

அவதானம் 'Black Friday' மோசடிகள் நிறைந்த வணிக தினம். Paris tamil.com

அவதானம் 'Black Friday'  மோசடிகள் நிறைந்த வணிக தினம். Paris tamil.com

23 கார்த்திகை 2023 வியாழன் 10:04 | பார்வைகள் : 3450


நாளை 24 நவம்பர் 'Black Friday' பொருட்களின் விலைகளை குறைத்து விற்பனையை அதிகரிக்க வர்த்தகர்களுக்கும், விலை கூடிய பொருட்களை மலிவு விலையில் கொள்வனவு செய்துகொள்ள நுகர்வோருக்கும் வழிசமைக்கும் வணிக தினம்.

அமெரிக்காவில் பிறந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் தேசத்திற்கு இறக்குமதியான 'Black Friday' எனும் வணிக நிகழ்வு, வர்த்தகர்கள், வாடிக்கையாளர்களைத் தாண்டி மோசடிக்காரர்களின் தினமாகவும் அண்மைக்காலமாக மாறியுள்ளது.

உதாரணமாக ஏனைய நாட்களில் 50€ யூரோ பெறுமதியான ஒரு பொருளை 80€  யூரோவாக உயர்த்திப் பதிவிட்டு பின்னர் 40%, 30% வீதம் விலைக் கழிவு என விற்பனை செய்யும் மோசடிகளும், விலையுயர்ந்த நிறுவனங்களின் இலைச்சினைகளை போலியான பொருட்களில் பதிவிட்டு விலைக்கழிவில் விற்பனை செய்யும் மோசடிகளும் நடைபெறுகிறது.

இவற்றிற்கும் மேலான மோசடிகள் 'Black Friday' காலத்தில் இணையத்தள விற்பனையில் மிக அதிகமாக அண்மைக்காலமாக நடைபெறுகிறது. கவர்ச்சிகரமான விளப்பரங்களுடன் உலாவரும் போலியான இணையத்தளங்கள் மக்கள் பொருட்க்களை வங்கியட்டையில் பணம் செலுத்தி வாங்கிய பின்னர் பொருட்களை அனுப்பாமலே இணையத்தளம் காணாமல் போகிறது. 

ஆயிரக்கணக்கான இத்தகைய வழக்குகள் கடந்த காலத்தில் காவல்துறையில் பதிவாகியுள்ளது. தொலைதூர நாடுகளில் இயங்கும் அத்தகைய இணையத்தளங்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிரமமானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே ஆடம்பரமான விளம்பரங்களில் மயங்கிப் போகாமல், விழிப்புடன் இருக்க வேண்டியது மக்களின் நிலையாகும். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்