Paristamil Navigation Paristamil advert login

BRICS அமைப்பில் இணைய பாகிஸ்தான் முயற்சி...

 BRICS அமைப்பில் இணைய பாகிஸ்தான் முயற்சி...

23 கார்த்திகை 2023 வியாழன் 10:05 | பார்வைகள் : 3361


2024ல் பிரிக்ஸ் அமைப்பில் சேர பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தான் சேர சீனா ஏற்கனவே ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு 6 புதிய நாடுகளை சேர்த்து பிரிக்ஸ் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

ரஷ்யாவின் ஆதரவு பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தானின் நுழைவுக்கு உதவும் என்று இஸ்லாமாபாத் நம்புகிறது.

2024-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் குழுவில் இணைவதற்கான விண்ணப்பத்தை பாகிஸ்தான் சமர்ப்பித்துள்ளதாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, உறுப்பினர் சேர்க்கைக்கு ரஷ்யாவின் உதவியை தங்கள் நாடு எதிர்பார்க்கிறது என்றார்.

2024 ஆம் ஆண்டு இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை ரஷ்யா வகிக்கும் என்றும்,

முன்னதாக, பிரிக்ஸ் கூட்டத் தொடரில் பாகிஸ்தானை பங்கேற்க விடாமல் தடுப்பது இந்தியா மட்டுமே என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. 

பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.

 சீனா மற்றும் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு பலதரப்பு மன்றமான எஸ்சிஓவில் பாகிஸ்தானுடன் இந்தியா நெருக்கமாக பணியாற்றியுள்ளது.

2024-ஆம் ஆண்டு கசானில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அந்தஸ்துக்கான வேட்பாளர்களின் பட்டியலை BRICS ஒப்புக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் அக்டோபர் தொடக்கத்தில் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்