chômeurs : கொடுப்பனவுகள் நீண்டகாலம் வழங்குவதில் சிக்கல்!!
23 கார்த்திகை 2023 வியாழன் 10:19 | பார்வைகள் : 6561
வேலையில்லாதோர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் (d'indemnisation des chômeurs) பல கட்டுப்பாடுகளை பொருளாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன் படி, வேலையில்லாதோருக்கான கொடுப்பனவுகள் பெறுவோர்களில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் காலம் குறைக்கப்படுவதாகவும், இதுவரை 27 மாதங்கள் வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகள், விரைவில் 18 மாதங்களாக குறைக்கப்படும் என பொருளாதார அமைச்சர் Bruno Le Maire தெரிவித்தார்.
ஓய்வூதிய வயதெல்லை 64 ஆக உள்ள நிலையில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிக காலம் கொடுப்பனவுகள் வழங்குவது பொருத்தமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.