ஓர்லி - யூதக் குடும்பத்தைக் கழுத்தறுப்பேன் - மிரட்டிய வாடகை வாகனச் சாரதி!
23 கார்த்திகை 2023 வியாழன் 17:53 | பார்வைகள் : 5292
கடந்த ஒக்டேபர் மாதம் 11ம் திகதி, இஸ்ரேலிலில் இருந்து ஓர்லி விமான நிலையம் வந்திறங்கிய ஒரு குடும்பம், விமான நிலையத்தில் சேவையில் இருந்த ஒரு வாடகைச் சிற்றுந்தில் (Taxi) ஏறி பயணிக்க முயல்கையில், அவர்களை «கேவலமான யூதர்கள்» என்று திட்டியதுடன், அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கழுத்தறுத்துக் கொல்வேன் என அந்த வாடகை வானச் சாரதி மிரட்டி உள்ளார். அத்துடன அவர்களை ஏற்றவும் மறுத்துள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி இரண்டு நாட்களாகிய நிலையிலேயே, அவர்கள் இஸ்ரேலில் இருந்து பிரான்ஸ் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாகனச் சாரதி கைது செய்யப்பட்டு, நேற்று சட்டக் கண்காணிப்பில் இலத்திரனியல் வளையத்துடன் விடப்பட்டுள்ளார். இவரது வாடகைவாகன அனுமதியும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024ஆம்ஆண்டு 6ம் திகதி மே மாதம் இவரிற்கு கிரித்தை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து தண்டனை வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத உயிரச்சுறுத்தல் மேற்கொண்ட குற்றம் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.