Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையிலான போர் 4 நாள் நிறுத்தம்

இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையிலான போர்  4 நாள் நிறுத்தம்

24 கார்த்திகை 2023 வெள்ளி 08:37 | பார்வைகள் : 2386


இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையிலான போர் நடவடிக்கை கடந்த மாதம் 7ம் திகதி தொடங்கி 1 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களுக்கு தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும்,

பிணை கைதிகளின் வெளியேற்றத்தை நடைமுறைப்படுத்தவும் போர் நிறுத்தம் மிகவும் அவசியமானது என அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கத்தார் மத்தியஸ்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் உறுதியாகியுள்ளது.

போர் நிறுத்தம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், இன்று 24.11.2023 வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 10:30) போர் நிறுத்தம் தொடங்குகிறது.

பின் அதே நாளில் உள்ளூர் நேரப்படி மாலை 4.00 மணிக்கு(இந்திய நேரப்படி இரவு 7.30) பிணையக் கைதிகள் விடுவிப்பு நடைபெறுகிறது.

மொத்தம் 50 பிணைக் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் இன்று விடுவிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதை பின் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

பல்வேறு உலக நாடுகளின் முன்முயற்சியில் ஏற்பட்டுள்ள இந்த போர் நிறுத்த ஒப்பந்தம், காசாவில் உள்ள 24 லட்சம் மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்