Paristamil Navigation Paristamil advert login

அயர்லாந்தில் பாரிய கத்திக்குத்து தாக்குதல்... வீதியில் ஒன்றுக்கூடிய பொது மக்கள்

அயர்லாந்தில் பாரிய கத்திக்குத்து தாக்குதல்... வீதியில் ஒன்றுக்கூடிய பொது மக்கள்

24 கார்த்திகை 2023 வெள்ளி 10:55 | பார்வைகள் : 7204


அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின் உள்ள பள்ளிக்கூடத்திற்கு வெளியே திடீரென கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அதில் நான்கு பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது தாக்குதலை மேற்கொண்ட மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை கத்தியால் குத்தி தாக்கினார். 

சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி, மேலும் இரு சிறுவர்கள், 30 வயது பெண் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் ஐந்து வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மற்றவர்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சம்பவ இடத்தில் 100-க்கும் அதிகமானோர் கூடி போராட்டத்தில ஈடுபட்டதை அடுத்து அவர்களை கட்டுப்படுத்த பொலிசார் குவிக்கப்பட்டனர். 

குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய கோபத்தில், அவர்கள் வாகனங்களை தீயிட்டு எரித்ததுடன் , அருகில் உள்ள கடைகளை சூறையாடினர்.

சூழ்நிலை மோசமானதைத் தொடர்ந்து பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியதனால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

ஆனால் பயங்கரவாத செயலுக்கான ஆதாரம் இல்லை என்றும், இருந்தபோதிலும் முழு விசாரணை நடத்தப்படும் எனவும் அயர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இந்த போராட்டம் நாடு முழுவதும விரிவடைந்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதுடன் அயர்லாந்து நாடாளுமன்றத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்