ரொறன்ரோவில் யூதர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள்
24 கார்த்திகை 2023 வெள்ளி 11:03 | பார்வைகள் : 3510
இஸ்ரேல் நாடு காசா பிரதேசத்தின் மீது மேற்கொண்டு வரும் தாக்குதலை தொடர்ந்து பல நாடுகளில் யூதர்களுக்கு எதிராக பல வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில் ரொறன்ரோவில் அமைந்துள்ள பாடசாலைகளில் குரோத உணர்வு சம்பவங்கள் கூடுதலாக பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து இரண்டாயிரம் பெற்றோர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபைக்கு இந்த இந்த சம்பவங்கள் தொடர்பில் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
பாடசாலைகள் பலவற்றில் குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான சம்பவங்கள் பதிவாகத் தொடங்கியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
யூத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் பாடசாலைகளில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் மாணவர்கள் உள ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.