கனடாவில் பலியாகும் ஆயிரக்கணக்கான கோழிகள்
24 கார்த்திகை 2023 வெள்ளி 12:56 | பார்வைகள் : 4420
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சுமார் ஐந்து மில்லியன் கோழிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பறவைக் காய்ச்சல காரணமாக இவ்வாறு கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பறவைக் காய்ச்சல் பரவுகை காரணமாக மாகாணம் முழுவதிலும் பெரும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
பண்ணை உரிமையாளர்கள் இதனால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் தொற்றை கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் பறவைப் பண்ணைகளில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதூக தெரிவிக்கப்படுகின்றது.