மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை! - இல் து பிரான்சை விட்டு வெளியேற்றப்பட்ட குழந்தைகள்!!
24 கார்த்திகை 2023 வெள்ளி 14:08 | பார்வைகள் : 5408
இல் து பிரான்சுக்குள் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக, ஆறு குழந்தைகள் சிகிச்சைகளுக்கான இங்கிருந்து வெளி மாகாணங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இல் து பிரான்ஸ் மாகாணத்தில் , பல்வேறு குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் அழற்சி எனும் புதிய நோய் கண்டறியப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல், மிக வேகமாக இதயம் துடித்தல் போன்ற சுவாசப்பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஏழு வாரங்களாக இந்த சுவாசப்பிரச்சனை தொடர்கிறது.
இல் து பிரான்ஸ் மாகாணத்தில் பல குழந்தைகள் இந்த நோயின் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறனர். அதேவேளை, கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் ஆறு குழந்தைகள் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பிராந்திய சுகாதார பிரிவு (l'agence régionale de Santé) அறிவித்துள்ளது.
போதிய வசதிகள் மற்றும் சிகிச்சைக் கட்டில்கள் இல்லாமையினால் குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இங்கு தற்போது 181 சிகிச்சைக் கட்டில்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு குழந்தைகளுக்கான நோய்த்தாக்கம் இவ்வருடத்தில் பிரான்சின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.