Paristamil Navigation Paristamil advert login

Haute-Saône விவசாயிகள் துரித உணவகங்களில் முன் உரங்களை கொட்டினர்.

Haute-Saône விவசாயிகள் துரித உணவகங்களில் முன் உரங்களை கொட்டினர்.

24 கார்த்திகை 2023 வெள்ளி 15:22 | பார்வைகள் : 3654


பிரான்ஸ் விவசாயிகளின் பிரதான தொழில் சங்கமான FNSEAன் Haute-Saône விவசாயிகள் ஒரு நூதனமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். தங்கள் நகரில் உள்ள துரித உணவகங்களான McDonald's மற்றும் Burger King உணவகங்களின் முன்னால், பண்ணைகளில் இருந்து 100% சதவீதம் பிரான்சில் தயாரிக்கப்படும் இயற்கை உரத்தைகொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நகரின் பெயர்ப்பலகையை தலைகீழாக மாறி நட்டு "இங்கு எல்லாம் தலைகீழாகவே நடக்கிறது" எனவும் கோஷம் இட்டுள்ளனர்.

McDonald's மற்றும் Burger King உணவகங்கள் தங்களின் விளம்பரங்களில், தங்கள் உணவகங்களில் பரிமாறப்பட்டும் உணவுகள் அனைத்தும் "Made in france" என பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் தமக்கு தேவையான இறைச்சி வகைகளை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். இதன்னால் பிரான்ஸ் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு மக்களுக்கும் பொய் சொல்லப்படுகிறது, இதனை அரசு கண்டுகொள்ளவில்லை எனவேதான் தாங்கள் இவ்வாறான போரட்டத்தில் ஈடுபடுவதாக; பிரான்ஸ் விவசாயிகளின் பிரதான தொழில் சங்கமான FNSEA தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்