Paristamil Navigation Paristamil advert login

திடுக்கிடும் அறிக்கை பிரான்சில் 2800 குழந்தைகள் வீதியில் தினமும் உறங்குகின்றனர். Abbé Pierre .

திடுக்கிடும் அறிக்கை பிரான்சில் 2800 குழந்தைகள் வீதியில் தினமும் உறங்குகின்றனர். Abbé Pierre .

24 கார்த்திகை 2023 வெள்ளி 15:23 | பார்வைகள் : 5882


பிரான்ஸ் முழுவதும் 'Abbé Pierre' எனும் அறக்கட்டளை அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், சுமார் 2,800 குழந்தைகள் சரியான உணவின்றி, உடுக்க உடையின்றி தினமும் வீதிகளின் ஓரங்களில், தாழ்வாரங்களில் உறங்கும் அவலம் நிலவுவதாக தெரிவித்துள்ளது.

அனேகமாக வீடுகள் அற்று குழந்தைகளின் தாய்மார்கள், குழந்தைகள் கல்விகற்கும் சிறுவர்கள் பாடசாலைகளின் முன்னால் கூடாரங்கள் போன்று கிடைத்த பொருட்களால் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதாகவும் Abbé Pierre மேலும் தெரிவித்துள்ளது.

காரணம் அவர்களின் குழந்தைகள் அங்கேயே கல்வி கற்பதால் சக மாணவர்களின் பெற்றோர்கள் உணவு, உடை என அவர்களுக்கு தேவையான சில உதவிகள் வழங்கி வருவதே காரணம் எனவும் தெரிவித்துள்ளது. வீடற்றவர்களுக்கு உதவுவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட 115 இலக்கத்திற்கு அழைத்தும் எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை எனவும் Abbé Pierre மேலும் தெரிவித்துள்ளது.

பிரான்சில் அகதிகளை அதிகம் வரவேற்கிறோம் எனக் கூறி அகதிகளை உள்வாங்கி; ஆணடொன்றுக்கு 60% சதவீத அகதிக் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டு, அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பாமல், அரச உதவிகளை மட்டும் நிறுத்தி, அவர்களை வீதியில் விடுவதே இந்த நிலைக்கு காரணம் என Abbé Pierre அறக்கட்டளை அமைப்பு அரசின் மேல் குற்றம் சாட்டி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்