Paristamil Navigation Paristamil advert login

விபத்தில் சிக்கிய சூர்யா எப்படி இருக்கிறார்?

விபத்தில் சிக்கிய சூர்யா எப்படி இருக்கிறார்?

24 கார்த்திகை 2023 வெள்ளி 15:24 | பார்வைகள் : 5768


நடிகர் சூர்யா நேற்று ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது விபத்தில் சிக்கியதாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. அப்போது ரோப் கேமரா எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்ததில் சூர்யாவின் தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து படப்பிடிப்பை நிறுத்தப்பட்டு சூர்யாவுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பெரிய அளவில் காயம் இல்லை என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் ஸ்டண்ட் இயக்குனர் தெரிவித்த நிலையில் தற்போது சூர்யாவே தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவு செய்துள்ளார்.

அன்பு நண்பர்கள் மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு வணக்கம். என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் எனது நன்றி. தற்போது நான் நலமாக இருக்கிறேன், என்றென்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் அவர் நலமாக இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்