வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றித் தெரியுமா?
24 கார்த்திகை 2023 வெள்ளி 15:36 | பார்வைகள் : 1818
மருத்துவ மூலிகையான வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறன .இது நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்துள்ளதால் நஞ்சை முறிக்கும், ஜீரணசக்தியை தூண்டும், உடலுக்கு உற்சாகத்தை ஊட்டும் தன்மைகளைக் கொண்டுள்ளது .
வெற்றிலை ஒரு வலுவான, காரமான மற்றும் நறுமண வாசனையைக் கொண்டுள்ளது.மேலும் இது வாய் புத்துணர்ச்சியூட்டலாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வெற்றிலையை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் காணப்படுகின்றன .
பொதுவாக இருமல் , சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்களினை வெற்றிலை கொண்டுள்ளது .
இவ்வாறான நன்மைகளினைக் கொண்ட வெற்றிலையினை உட்க்கொண்டு ,அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளினை பெற்று ஆரோக்கியத்தினை மேம்படுத்திக் கொள்ளுங்கள் .