La Courneuve : A86 மற்றும் A1 நெடுஞ்சாலைகளுக்கு வேகக்கட்டுப்பாடு!!

24 கார்த்திகை 2023 வெள்ளி 18:33 | பார்வைகள் : 9920
La Courneuve நகரை ஊடறுக்கும் A86 மற்றும் A1 ஆகிய நெடுஞ்சாலைகளுக்கு வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளது. பரீட்சாத்த முயற்சியாக வரும் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த வேகக்கட்டுப்பாக நடைமுறைக்கு வர உள்ளது.
மணிக்கு 130 கி/மீ வேகமாக உள்ள A1 நெடுஞ்சாலை மணிக்கு 90 கி/மீ வேகமாகவும், மணிக்கு 90 கி/மீ வேகமாகஉள்ள A86 நெடுஞ்சாலை 70 கி/மீ வேகமாகவும் குறைக்கப்பட உள்ளது. நாள் ஒன்றில் 200,000 மகிழுந்துகள் La Courneuve நகரை ஊடறுக்கும் நிலையில், அதிக சுற்றுச்சூழல் மாசடைவை அந்நகரம் சந்திப்பதாக அதன் நகர முதல்வர் கவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த வேக குறைப்புக்கு எதிராக எதிர்ப்புகள் வலுக்கவும் தவறவில்லை. இதுவரை பல குற்றக்கடிதங்கள் நகரசபைக்கு அனுப்பப்பட்டுள்ளன.