Paristamil Navigation Paristamil advert login

காதலியை திருமணம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்!

 காதலியை திருமணம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்!

25 கார்த்திகை 2023 சனி 08:24 | பார்வைகள் : 5212


இந்திய கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனி தனது நீண்ட நாள் காதலியான சுவாதி அஸ்தனாவை திருமணம் செய்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியில் 2019 ஆம் ஆண்டில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித போட்டிகளிலும் விளையாடியுள்ள சைனி, இங்கிலாந்தின் கவுண்டி அணியான Worcestershire யில் விளையாடி வருகிறார். 

இந்த நிலையில், சைனிக்கும் அவரது நீண்ட நாள் காதலி சுவாதி அஸ்தனாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

அத்துடன், ''உங்களுடன் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் காதலின் நாள் தான். என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்பதை இன்று முடிவு செய்துள்ளோம் எனது சிறப்பான நாளான 23.11.23 அன்று எங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம். 

உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தையும் அன்பையும் தேடுகிறோம்'' என அவர் பதிவிட்டுள்ளார்.

புதுமணத் தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.      

வர்த்தக‌ விளம்பரங்கள்