Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் மர்ம நிமோனியா காய்ச்சல் - விரிவான அறிக்கையை கோரும் WHO

சீனாவில் மர்ம நிமோனியா காய்ச்சல் - விரிவான அறிக்கையை கோரும் WHO

25 கார்த்திகை 2023 சனி 10:25 | பார்வைகள் : 3048


சிறுவர்கள் மத்தியில் சுவாசநோய்களின் அதிகரிப்பு மற்றும் மர்ம நிமோனியா காய்ச்சல் குறித்து சீனாவிடமிருந்து விரிவான அறிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.

இம்மாதம் 13 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சீன தேசிய சுகாதார ஆணையக அதிகாரிகள் குறித்த நோய் அதிகரிப்பதாக அறிவித்துள்ளனர். 

கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கம்,  இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ், RSV, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவித்துள்ளார்கள்.

சுகாதார வசதிகள் மற்றும் சமூக அமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட நோய் கண்காணிப்பு மற்றும் நோயாளிகளை நிர்வகிக்கும் சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தி இருந்தார்கள்.

இந்நிலையிலேயே, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.

குழந்தைகளிடையே பரவும் இந்த திடீர் நிமோனியா பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமெட் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவுவதற்கு முன்பும் சரியாக 2019 டிசம்பரில் இந்த அமைப்பு புது நோய்ப் பாதிப்பு குறித்து எச்சரித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்