13 இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு
25 கார்த்திகை 2023 சனி 14:06 | பார்வைகள் : 3045
காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்களில் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒன்றின்படி,
நான்கு நாட்களுக்கு போரை நிறுத்துவதென்றும், காசாவில் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள் சிலரை ஹமாஸ் விடுவிப்பதென்றும், பதிலுக்கு, இஸ்ரேல் சிறைகளிலிருக்கும் பாலஸ்தீனியர்கள் சிலரை இஸ்ரேல் விடுவிப்பதென்றும் முடிவானது.
அதன்படி, நேற்று மதியம் 13 இஸ்ரேலியர்கள் ஹமாஸால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை செஞ்சிலுவைச் சங்கம் எகிப்துக்கு அழைத்துக்கொண்டுவந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குட்டிக் குழந்தை Emilia (5) தன் தாய் Danielle Aloniயுடன் விடுவிக்கப்பட்டிருக்கிறாள்.
விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று தாய்மார்கள், ஒரு பாட்டி மற்றும் நான்கு சிறுபிள்ளைகள் என எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்த நிலையில், பதிலுக்கு, இஸ்ரேலில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், மீதமுள்ளவர்கள் சிறுபிள்ளைகள் ஆவர்.