Paristamil Navigation Paristamil advert login

Stains : தீ விபத்தில் மூவர் பலி! - எட்டு பேர் காயம்!!

Stains : தீ விபத்தில் மூவர் பலி! - எட்டு பேர் காயம்!!

25 கார்த்திகை 2023 சனி 14:16 | பார்வைகள் : 14044


இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் மூவர் பலியாகியுள்ளனர். குழந்தை உட்பட்ட எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். 

place du Colonel-Fabien (93 ஆம் மாவட்டம்) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிகாலை 4 மணி அளவில் தீ பரவியுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பலர் தீக்குள் சிக்கினர். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்துவதற்குள் நிலமை கைமீறிச் சென்றது. மொத்தமாக 80 தீயணைப்பு படையினர் களத்தில் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

தீ விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் எட்டு பேர் காயமடைந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் குழந்தை ஒன்றும் இருப்பதாக அறிய முடிகிறது. இத்தீவிபத்து சம்பவம் அப்பகுதியை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்