Bagnolet : கத்திக் குத்து தாக்குதலில் 23 வயதுடைய ஒருவர் பலி!

25 கார்த்திகை 2023 சனி 14:42 | பார்வைகள் : 6541
Bagnolet (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார்.
Cité de la Capsulerie பகுதியில் இந்த குழு மோதல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. rue Robespierre வீதியில் இரவு 10.30 மணி அளவில் கூடிய 30 பேர் வரையான இளைஞர்கள், மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் அரைமணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட, மோதல் முடிவுக்கு வந்தது.
இந்த மோதலில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியானார். இரவு 11.50 மணி அளவில் அவர் பலியானதாக SAMU மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த மோதல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.