இலங்கை அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு
25 கார்த்திகை 2023 சனி 15:35 | பார்வைகள் : 1931
அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வேதன அதிகரிப்பினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 5,000 ரூபாய் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலும், மிகுதியை ஒக்டோபர் மாதத்திலும் வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2,500 ரூபாவினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பில் 5,000 ரூபாவினை எதிர்வரும் ஜனவரி மாதத்திலேயே பெற்றுக்கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாவினையும் பெற்றுக்கொடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.